(UTV | கொழும்பு) –
வரவு – செலவுத் திட்டத்தின் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு மற்றும் கடன்களை பெறுவதன் மூலம் சமநிலைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பட்ஜெட் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நித்திரையின் போது கண்ட ஓர் கனவாகும். மேலும் ஜனாதிபதியின் பட்ஜெட் கனவு உலகிற்கு எடுத்து செல்லுவதாகாவும் அது நடைமுறைக்கு பொருத்தமில்லை என்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் பட்ஜெட் சர்வதேச நாணய நிதியத்தின் குரல் என்றும் அதனை வெளிப்படுத்து என்பது ஜனாதிபதியின் வாய் மாத்திரமே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
புதன்கிழமை (16) எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொய்யான பட்ஜெட் ஒன்றே முன்வைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மொத்த பற்றாக்குறை 2404 பில்லியன்களாகும்.
பற்றாக்குறை என்பது கடன் பெற்றுக் கொள்வதாகும். குறித்த பற்றாக்குறையில் சுமார் 550 முதல் 600 வரையில் வரி வருமானம் பெற்று கொள்ளும் வகையில் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு மற்றும் கடன்களை பெறுவதன் மூலம் சமநிலைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது காரணம் பொருளாதார நெருக்கடிகள் நாட்டில் உக்கிரமடைந்துள்ளது.
நாட்டுக்கு டொலர் கொண்டு வருபவர்கள் ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்கு நூற்றுக்கு 30 வீதம் தீர்வை அறிவிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் இனங்கப்போவதில்லை. மேலும் 30 வீத வரியினை 15 வீதம் குறைக்கவேண்டும்.
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டம் பொய்யான ஒன்றாகும். உதாரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு மருத்தப்பீடத்தை ஸ்தாபிப்பதற்காக 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு மருத்துவ பீடத்திற்கான ஒரு கட்டிடத்தையேனும் நிர்மாணிக்க முடியுமா?
அவ்வாறு 200 மில்லியன்களுக்குள் கட்டிடம் உருவாக்கப்பட்டாலும் மருத்துவ பீடத்திற்கான உபகரணங்கள் எங்கிருந்து பெறுவது? மேலும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கொலன்னாவ பகுதியில் ஏற்பட்ட வெள்ளை பெருக்கின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2,300 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் இருந்து பட்ஜெட் எவ்வாறு உள்ளது என்பதனை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜனாதிபதியின் பட்ஜெட் நடைமுறைக்கு பொருந்தாது. கனவு உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு பட்ஜெட்டாகும். மேலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு
உடன்படாமைக்கு காரணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்களாணையின்மையே. மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் 4 வருடங்கள் கடந்துள்ளமையால் பலமின்றி காணப்படுகிறது இதுவும் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் நெருக்கடிகளுக்கு தீர்பு காண்பதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியது பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதேயாகும்.
இருப்பினும் ஜனாதிபதிக்கு தேர்தலை நடத்துவதற்கு பயம். மேலும் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாம் தேர்தல் ஆணைக்குழுவில் தஞ்சமடைவோம் என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්