(UTV | ஜம்மு- காஷ்மீர்) – ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிக்க அரசு அதி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையிலும், அவ்வப்போது அப்பாவி பொது மக்களை குறி வைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 03 நாட்களாக மேற்கொண்ட சோதனையில், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இரண்டு ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், இரண்டு சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியும் சோதனைகளும் அதிகரித்துள்ளததாகவும் அறியமுடிகின்றது.