(UTV | கொழும்பு) – நேற்று இடம்பெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர் ஒருவர் தவறான வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும்,இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්