(UTV | கொழும்பு) – மாணவர்களிடத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் முகமாக கல்வி அமைச்சரினால் பாடசாலை மாணவர்களிடத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன் படி போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே இவ்வாறான பாடசாலை மாணவர்களையும் அவர்களின் புத்தகப் பைகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அவற்றை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්