(UTV | கொழும்பு) – எடுத்த கடனை கொடுக்க முடியாமல் தாயும் குழந்தைகளும் விஷமருந்தியுள்ளனர்.
எடுத்த கடனை திரும்ப செலுத்த முடியாது அழுத்தங்களுக்கு உள்ளான தாய் ஒருவர், 5 வயதான ஆண் பிள்ளை மற்றும் 8 வயதான பெண் பிள்ளைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் நால்ல தலாஹேன பின்கும்புரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் விஷம் அருந்திய நிலையில் ஆபத்தான நிலைமையில் இருந்த இரண்டு பிள்ளைகளும், கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாய் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விஷமருந்திய 31 வயதான த்தை , தனது கணவனுக்கு தெரியாமல் சுமார் 3 லட்சத் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு , பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், அந்தப்பெண், அன்னாசி பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படும் மூன்று கிருமி நாசனி குப்பிகளை எடுத்து வந்து அவற்றில் இரண்டு குப்பிகளை பிள்ளைகளுக்கு பருக்கி விட்டு, தானும் அதனை அருந்தியுள்ளார்.
விஷம் கொடுக்கப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் பிள்ளைகளின் உடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 5 வயதான ஆண் பிள்ளை அயல் வீட்டுக்கு சென்று தாய் வீட்டில் கீழே விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக , அங்கு சென்ற அயல் வீட்டுப்பெண்ணொருவர், பெண் விஷம் அருந்தி இருப்பதை அறிந்து, பெண்ணை உடனடியாக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இதேவேளை, சற்று நேரத்தில் சிறுவன் தனக்கு தலைவலிப்பதாக அழுதுள்ளார். தாய் அருந்தியதை தாய் தமக்கும் கொடுத்ததாகவு, சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு பிள்ளைகளும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சீமாட்டி றிஜ்வே மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக நால்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්