13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- குடும்பஸ்தர் கைது.

(UTV | கொழும்பு) –  13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- குடும்பஸ்தர் கைது.

முல்லைத்தீவு , முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதுடைய பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியின் மாமா வின் மனைவி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாமா குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமா , தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் சிறுமியின் அக்கா முறையான 20 வயதுடைய யுவதியுடனும் பாலியல் துஸ்பிரயேகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *