பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் சட்டம் பற்றிய அடிப்படைக்கல்வியை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி சாதாரண தர மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டிற்குள் அதற்கான முன்மொழிவுகளில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் தனக்கான உரிமைகள் என்ன என்பது பற்றிய தெரிந்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை “நம் நாட்டில் உள்ள பலருக்கு தங்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது. அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகளை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *