மிஹிந்தலை விவகாரம்: மெளனத்தை கலைந்த மஹிந்த

(UTV | கொழும்பு) –
பௌத்தர்களின் பிரதான பாரம்பரியத்தை கொண்ட மிஹிந்தலை விகாரையில் மின்சாரம்து ண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கருத்து வெளியிடாமல் அமைதி காத்து வந்த மகிந்த இந்த மின் தடையின் பின்னர் மௌனம் கலைத்து பேசியுள்ளார்.

விகாரையின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாவிடின் அதனை பகுதிகளாக செலுத்த அனுமதிக்குமாறு மின்சார அமைச்சரிடம் கோரவுள்ளதாக மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

எமது அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை கருத்திற்கொண்டு நாட்டின் முதலாவது பௌத்த மையமான மிஹிந்தலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென்பது தனது கருத்தாகும் என மகிந்த மேலும் தெரிவித்தார்.

எனினும் விகாரையின் மின்சார கட்டணமான 41 இலட்சம் ரூபாவை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ செலுத்தியுள்ள நிலையில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *