இல்ல விளையாட்டு போட்டியால் உயிரிழந்த வவுனியா முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்!

(UTV | கொழும்பு) –

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மைதானத்திற்கு அருகிலிருந்த ஆழமான நீர் நிறைந்த கிடங்கில் பாடசாலை மாணவர்கள் இருவரும் தவறி வீழ்ந்துள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த 14 , 15 வயதுடைய தரம் 09 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

ஜனாஸாக்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *