கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *