(UTV | கொழும்பு) –
ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலைத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலைத்தீவு கருதியது. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன. இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது கலீல் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்குவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சு இரு நாடுகளின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්