(UTV | கொழும்பு) –
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை மறித்து குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த பயணி அவர்களிடம் இருந்து தப்பித்து கம்பளை பொலிஸாரிடம் நேற்று இரவு தஞ்சமடைந்துள்ளார். பழங்கால வாள் ஒன்று குறித்து விசாரிப்பதற்காக குறித்த குழுவினர் தன்னை கொழும்புக்கு கடத்திச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். மாவெலயில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை துரத்திச் சென்ற வேன் ஒன்று அதனை மறைத்து, நான்கு பேர் பேருந்தில் ஏறி பயணி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இறுதியில், கத்திக்குத்துத் தாக்குதலால் காயமடைந்த பயணியை குறித்த குழுவினர் வேனில் கடத்திச் சென்றனர். கம்பளை டிப்போவின் சாரதியான 46 வயதான ஹேமந்த ராஜபக்ச என்பவரே கடத்தப்பட்டிருந்தார். பணிக்கு செல்லும் போது நேற்றைய தினம் இந்தச் சம்பவத்தை அவர் எதிர்கொண்டிருந்தார். தன்னை கொழும்பு ஒருகொடவத்தை பகுதிக்கு வேனில் ஏற்றிச் சென்றதாகவும் அங்கு தன்னிடம் இருந்த வாள் பற்றிக் கேட்டதாகவும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கடத்த வந்தவர்களில் ஒரு பெண்ணும் இருந்ததை பொலிஸார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பின்னர் கடத்தப்பட்டவர் நேற்று இரவு கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්