இலங்கை கௌரவத்தை பாதுகாப்பதற்கு எப்போதும் ஆதரவளிக்கும் – சீன தூதுவர்.

(UTV | கொழும்பு) –

சர்வதேச பிராந்திய உள்நாட்டு நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும் சீனா இலங்கை ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வலுப்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் ஹீ சென் ஹொங் இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்கு சீனா தன்னாலான ஆதரவை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹன்வெல ராஜசிங்க கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையும் சீனாவும் எப்போதும்ஒருவரையொருவர் நம்பும் மதிக்கும் சிறந்த அயல்நாடுகளாக காணப்பட்டன.ஒருவரிலிருந்து மற்றையவர் நன்மை பெறும் சிறந்த நண்பர்களாகவும் ஒருவருக்கு ஒருவர் உதவும் சிறந்த நண்பர்களாகவும் காணப்பட்டனர். சர்வதேச பிராந்திய உள்நாட்டு நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும் சீனா இலங்கை ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வலுப்பெற்றுள்ளதுடன் எமது நட்புறவு இரு நாட்டு மக்களின் இதயங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது . தற்போது இலங்கையின் சகோதர சகோதரிகள் அபிவிருத்தி தொடர்பில் தற்காலிக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் துணிச்சலான மக்கள் இந்த நெருக்கடிகளை வெற்றிகொள்வார்கள் இலங்கைக்கு மிகவும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.
இலங்கை பேண்தகு அபிவிருத்தியை சாத்தியமாக்குவது வறுமை பொறியிலிருந்து விடுபடுவது அபிவிருத்தியுடன் தொடர்பற்ற பொறிகளில் இருந்து விடுபடுவது தனது சுதந்திரத்தை இறைமையை ஆள்புல ஒருமைப்பாட்டை தேசிய கௌரவத்தை பேணுவது போன்றவற்றிற்கு உதவுவதற்காக சீனா தன்னால் முடிந்த எல்லைக்குள் நின்று உதவும்.இலங்கை சீன உறவுகளை மேலும் துரிதப்படுத்துவதில் இந்த வருடம் மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது பிரதமர் தினேஸ் குணவர்த்தன சீனாவின் யுனான் மாகாணத்திற்கு வெற்றிகரமான விஜயமொன்றை மேற்கொண்டார்.

அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு குறிப்பிடத்தக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வத்துடன் செயல்படுத்துவதற்கும்இ இரு நாட்டு மக்களுக்கும் அதிக உறுதியான பலன்களைக் கொண்டு வருவதற்கும் இந்த உயர்மட்ட விஜயங்களை ஒரு வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

       

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *