உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) –

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் இடம்பெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமையால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷ்யா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *