பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு!

(UTV | கொழும்பு) –

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *