(UTV | கொழும்பு) –
நாகை- காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்கள்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கடந்த 10 ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7 ஆம் திகதி வந்தது. இந்த கப்பல் சோதனை ஓட்டம் 8ஆம் திகதி நடந்தது. இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வந்த கப்பல், அங்கிருந்து புறப்பட்டு நாகை சென்றது. இந்த கப்பலில் பயணிக்க, பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 (25,278.04 லங்கை ரூபா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு கடவுசீட்டு, இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒக்.10 ஆம் திகதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நிகழ்வு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களினால் கப்பல் போக்குவரத்து தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வாழ்த்து செய்தி கூறவுள்ளாா். கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவில் நேரடியாக பங்கேற்கும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு சிறப்புரையாற்றவுள்ளாா். இந்தநிலையில் சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர், மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சா்வானந்த சோனாவால் ஆகியோா் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. முதல் நாள் மட்டும் கட்டண சலுகையாக நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க தினமான சனிக்கிழமை (14) மட்டும் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முறை கட்டணமாக ரூ. 2,800 (10,973.27 இலங்கை ரூபா) மட்டும் (வரிகள் உள்பட) வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්