(UTV | கொழும்பு) –
சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான குற்றப்பத்திரிகையை கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (27) குற்றப்பத்திரிகையை கையளித்தார்.
குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பான தன்னிலை விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். தன்னிலை விளக்கத்தை வழங்காவிடின், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரிடமும் இந்தக் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணை அறிக்கை, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோகணதீரவிடம், சம்பந்தப்பட்ட விசாரணைக் குழுவினால் அண்மையில் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் செயலாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் உதவி செயலாளர் நாயகம் திஹன்சன அபேரத்ன சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பித்தார். இந்த முறையான விசாரணையின் இறுதி அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட விசாரணைக் குழுவின் முன்னிலையில், பாராளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அண்மையில் சாட்சியமளித்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්