“வெற்றிபெற்ற இந்தியா- படுதோல்வியடைந்த இலங்கை”

(UTV | கொழும்பு) –

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் Shubman Gill அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், Virat Kohli 88 ஓட்டங்களையும், Shreyas Iyer 82 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 5 விக்கெட்டுக்களையும், Dushmantha Chameera 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன்படி, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மஹீஸ் தீக்‌ஷன 12 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர்.

ஏனைய அனைத்து வீரர்களும் 10 ஐ விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.

பந்து வீச்சில் Mohammed Siraj 3 விக்கெட்டுக்களையும், Mohammed Shami 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *