இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.

(UTV | கொழும்பு) –

இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பிலிருந்த அமைச்சர்கள் சிலர் கேள்வி எழுப்பிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கூட அனுமதிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தப்பட வில்லை. இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு அறிவிப்பட வேண்டும். ஆனால் இம்முறை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *