ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

(UTV | கொழும்பு) –

வலுவான ஆட்சிக்காக ஊழலுக்கு எதிரான செயல்முறை மிகவும் வலுவாக செயல்படுத்தப்படும் என்றும்,மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரவுசெலவு திட்ட வரவு மற்றும் செலவிற்கிடையில் காணப்படும் இடைவெளி கணக்கிடப்படுவதால்,ஊழலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக சதவீதமாக இருப்பதால்,இதுவும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பண்டோரா பத்திரங்கள் மூலம் திருடப்பட்ட பணம் மற்றும் வளங்கள் தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ள படியால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் திருடர்களைப் பிடிக்கும் சரியான கட்டமைப்பு செயல்படுத்தப்படும் என்றும்,ஊழல்வாதிகளை பிடிப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பல்ல என்றாலும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாக மாற்ற முடியாத சட்டமாக பொது வளங்கள் திருடப்படுவதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தனி அத்தியாயம் இருக்க வேண்டும் என்றும்,இதனை உருவாக்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்குத் தேவையான மனித வளம் மற்றும் பௌதீக வளங்கள் உரிய கட்டளைச்சட்டங்கள் மூலம் பெறப்பட வேண்டும் என்றும்,அப்போது இந்த செயல்முறை அரசியல் செல்வாக்கு இல்லாமல் செயல்படக்கூடிய சுதந்திரமான நிறுவனங்களாக அமையும் என்றும்,இதனால் திருடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறுவது இலகுவானதாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கம்பஹா மாவட்டம்,வத்தளை பிரதேசத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் The Blue Print நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழ்ச்சியில் திருடப்பட்ட செல்வத்தை மீட்க முடியாதுள்ளதாகவும்,2015 ஆம் ஆண்டு அரசாங்கம் கூட திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும் அவர்கள் ஆட்சிக்கு நியமிக்கப்பட்ட பிறகு திருடர்களை பாதுகாத்தனர் என்றும்,தனக்கும் ஜனாதிபதி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்த போதிலும், திருடர்களின் ஆணையின் கீழ்,திருடர்களைப் பிடிப்பது சாத்தியமற்றது என்பதால் தான் அப்பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தை இதயசுத்தியுடன் வழி நடத்த வேண்டும் என்றும்,நாட்டை அலைக்கழித்து அல்லது ஆவேசமாக ஆள முடியாது எனவும், புத்தியின் அடிப்படையில் புதிய பாதையில் பயணித்து தேசிய தேவைகளை அடையாளப்படுத்தி,தேச நலன்களை அறிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழலுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு செயல்பட்டது என்பது நடைமுறையில் காட்டப்பட்டுள்ளதாகவும், அந்த ஊழலுக்கு எதிராக 225 பேரையும் ஒன்று திரட்டி எதிர்க்கட்சி ஒன்று முதன்முறையாக இவ்வாறு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் கிரிக்கெட்டை தடை செய்ய தேவையான காரியங்களை கூட கிரிக்கெட் நிர்வாகம் செய்தது நாட்டுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார். ஏனைய அரசாங்கங்களைப் போலல்லாமல், சொன்னதைச் செய்யும் கட்சியாக,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களை பிடித்து நமது நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

     

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *