இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் முன்னணி தனியார் சர்வதேச கல்வி நிறுவனமாக திகழும் ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் இன் நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக
இடம் பெற்றது. இப் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலாநிதி, முதுகலை,இளங்கலை, உயர்டிப்ளோமா ஆகிய பட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர்கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் கௌரவ அதிதிகளாக அமைச்சர் டிராட் அலஸ், அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், அனுராதா ஜெயரட்ண
ஆகியோர்கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் ஐ டி எம் என் சி சர்வதேச கல்வி நிறுவனத்தின் பிரத்தனிய பல்கலைக்கழகமானBuckinghamshire New University இன் முக்கிய பிரதிநிதிகளாகிய கலாதிதி சேரா வில்லியம், மைக் மைக்மைக்டோமற் மற்றும் மற்றும் அலன் கிளார்க்,தூதுவரும் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளருமான
அமீர் அஜ்வாத் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவைத்தனர். இப்பட்டமளிப்பு விழா காலை மற்றும் மாலை நேர நிகழ்வுகளாக இரண்டு பகுதிகளாக இடம்பெற்றது. பிரத்தானியாவின் Buckinghamshire New University மற்றும் EdHat International ஆகிய சர்வதேசநிறுவனங்களின் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக ஐ டி எம் என் சி சர்வதேச கல்வி நிறுவனம்நீண்ட காலமாக செயற்படுகின்றது. இன்று இலங்கையில் சட்டக் கல்வித்துறையில் பல சாதனைகளைபடைத்து முன்னணியில் திகழும் இந்த நிறுவனம் இப்பட்டமளிப்பு விழாவில் தொழில்நுட்ப்பக்கல்வி, முகாமைத்துவக்கல்வி, ஆசிரியர்கல்வி, மற்றும் சட்டக்கல்வியில் பட்டங்களை வழங்கிவைத்தது.

40 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கல்வித்துறையியில் நிலைத்திற்கும் ஐ டி எம் என் சி நிறுவனம் சர்வதேசதரத்தில் இலங்கை பல்கலைக்கழக மானியத்தின் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வியினை வழங்கிவருகின்றது.

         

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *