காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரிஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றுஇன்று காலை  கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது. இந்த மகஜரை கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்ரவூப் ஹக்கீம்வீரசுமன வீரசிங்ஹபௌசிஹலீம்இஷாக் ரஹ்மான்ஹரீஸ்தௌபீக் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். மகஜரை கையளித்த பின்னர் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

159ற்கும்  மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றைஇன்று காலை கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளித்துள்ளோம். ஐ.நா பொதுச்செயலாளர் திரு.அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு முகவரியிட்ட இந்தக் கடிதமே இலங்கை தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனினும்இந்த முயற்சி அவசரமாக மேற்கொள்ளப்பட்டதனால்அனைவரினது கையொப்பங்களையும் பெறமுடியாமல் போய்விட்டது.

இஸ்ரேலியர்களால் ஏவப்படும் ஏவுகணைகளும் பொழியப்பட்டு வரும் குண்டுகளும் காசாவில் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகின்றன. பச்சிளம் குழந்தைகள்பெண்கள் என்ற விவஸ்தையின்றி குண்டுகளை வீசிஇந்த அக்கிரமங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷிபா வைத்தியாசாலை மீதும் குண்டுகள் வீசப்பட்டுஅங்குள்ள நோயாளர்கள் வைத்தியர்கள் உட்பட மருத்துவ உதவியாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவே ஒரு மயான பூமியாக மாறியுள்ளது. எனவேயுத்த நிறுத்தத்தினால் மட்டுமே இந்த மக்களை காப்பாற்ற முடியும். எனவேயுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே, நாம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளோம்.

அதுமாத்திரமின்றிபாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த அராஜகத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு உதவக் கூடாது. இந்த யுத்தத்தினால் 120க்கு மேற்பட்ட ஐ.நா ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளில்120 உலக நாடுகள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பிரேரணை கொண்டுவந்த போதும்ஐ.நாவினால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

அத்துடன், 54க்கு மேற்பட்ட  முஸ்லிம் நாடுகளும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துயுத்த நிறுத்தத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதேபோன்றுஅரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் (OIC) ஆகியவற்றுக்கும் மேற்குலக நாடுகளான பிரான்ஸ்அமெரிக்காபிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் இந்த மகஜரின் பிரதியை அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டார். இதேவேளை, குறித்த மகஜரின் பிரதியொன்று இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு:- மகஜரின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட்டுள்ளது.

         

UN Letter Tamil

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *