உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கோயில்!

(UTV | கொழும்பு) –

உலகின் 8ஆவது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இத்தாலியின் பாம்பீயை பின்னுக்கு தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும். சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள, இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது.

அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். உலகில் அறிமுகமே தேவையில்லாத இடங்களில் இதுவும் ஒன்று. உலகில் அதிகமான பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது முதலில் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கோவிலாகக் கட்டப்பட்டது. பின்னர் புத்த மதத்தின் முக்கிய கோவிலாக மாறியது.

அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் காணமுடியும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *