அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் 18.12.2023 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 120 Diploma மாணவர்கள், 50 HND மாணவர்கள் 150, பட்டதாரி மற்றும் முதுமாணி மாணவர்கள் விருதுகளை பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக மதிப்பிற்குரிய கல்வி ராஜாங்க அமைச்சர் திரு. அரவிந்தகுமார் அவர்களும் மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானியர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்கின்றனர். இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் ஐந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைப்பதற்காக வருகை தருகின்றனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரு சானக உதயக்குமார அமரசிங்க அவர்களும் விசேட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்த உள்ளார்.கல்லூரியின் 35 விரிவுரையாளர்களும் 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதுகளும் சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் உட்பட 1000 க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியை அலங்கரிக்க உள்ளனர் என அமேசன் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் தெரிவித்தார்.
www.amazoncollege.lk

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *