நாட்டில் இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆறு பில்லியன் ரூபாவாகும்.
இளநீர் தோட்டங்களை ஒரு பயிராக பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

உலகில் பல நாடுகள் இளநீர் பயிரிட முயற்சித்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தாலும், உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கை இளநீர் என்றும், எனவே இலங்கையில் இளநீரை பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *