மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை!

(UTV | கொழும்பு) –

கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை திடீரென 230 ரூபாவால் உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் 2000/=ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900/= ரூபாய்யென விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/=ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று  காலை விலை உச்சம் பெற்றுள்ள அதேநேரத்தில் கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் 1130/= ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு அதை 1180/=ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய மரக்கறி வகைகளுக்கும் 20/= ரூபாய் தொடக்கம் 50/= ரூபாய் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *