யாசகர்களை ஒழிக்க இந்தியா திட்டம்!

(UTV | கொழும்பு) –

இந்தியாவின் 30 நகரங்களில் யாசகர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநகரங்களில் யாசகம் கேட்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெண்களுக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொள்ள வழி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தத் துறை சார்பில், மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு உதவியளித்து, நகரப் பகுதிகளில் யாசகர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் யாசகர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த நகரங்களின் பட்டியலில் மேலும் பல நகரங்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதலில், நாட்டின் மத ரீதியான, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற நகரங்களைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தனிநபர் வாழ்முறைக்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *