இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

(UTV | கொழும்பு) –

இலங்கையின் நிதித்துறையின் பின்னடைவை வலுப்படுத்த இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் ‘நிதித்துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல்’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

உலக வங்கிக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான திட்ட ஒப்பந்த அமுலாக்கத்துக்கு இணையாக இந்த நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தில் கவனம் செலுத்தி இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான இலக்காகும்.

மத்திய வங்கியானது இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் செயற்படுத்தும் முகவராகவுள்ளது. இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம் சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கியியல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம் என பெயரிடப்பட்டது.

இலங்கை அரசாங்கம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய ஆகியவற்றுக்கிடையிலான இந்த ஒப்பந்தங்களில் திறைச்சேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் – சர்வோஸ் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிராந்திய துணைத் தலைவர் மார்டின் ரைஸர் ஒப்பந்த கைச்சாத்திடல் நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

உலக வங்கியின் நிதியுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளதாவது,

உத்தேச கடன் இலங்கையின் வைப்பு காப்புறுதியின் இருப்புக்களை அதிகரிக்கும் இதன் மூலம் திட்டத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால உறுதிப்பாடு மேம்படுத்தப்படும். அத்துடன் நிதி அமைப்பின் வைப்பாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பவும், நாட்டின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதியாக பேணுவதற்கும் வழிவகுக்கும். எனவே இந்த நிதி வழங்கல் வசதியின் மூலம் உலக வங்கியின் ஆதரவு உரிய நேரத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *