முஸ்லிம் மத்ரஸாவை சீரமைக்க வேண்டிய கட்டாயம்: அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று தேவை

எமது நாட்டில் உள்ள மத்­ர­சாக்­களை பதிவு செய்ய மாத்­திரம் முஸ்லிம் கலா­சார விவ­காரத் திணைக்­களம் இருக்­கி­றது. ஆனால் அவற்றை மேற்­பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்­டுப்­பா­டு­களை விதிக்க எவரும் இல்லை. மத்­ரசாக்­களை நடத்­து­வ­தற்­கான விதிகள் ஒழுக்க நெறிக் கோவைகள் சுற்­ற­றிக்­கை­களை விதித்து பரி­பா­லிக்க எவரும் இல்லை.

உலமா ஒருவர் செல்­வந்தர் ஒரு­வரைப் பிடித்துக் கொண்டு மத்­ர­சாவை ஆரம்­பித்துக் கொள்­கிறார். அந்த உலமா தனது உலமா நண்­பர்­களை அங்கு கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளாக அதா­வது உஸ்­தாத்­க­ளாக ஆக்கிக் கொள்­கிறார். குறிப்­பிட்ட உலமா மத்­ரசா அதி­ப­ராக முதலில் தன்னை தானே நிய­மித்­துக்­கொள்வார். அவ­ரது தகு­தியைப் பார்க்க எவரும் இல்லை. பாட­சா­லை­களில் ஒரு அதி­ப­ராக வரு­வ­தற்கு பல பரீட்­சை­களில் சித்­தி­ய­டைய வேண்டும். அதற்கு அனு­ப­வமும் வேண்டும். அனு­பவக் காலத்தை நிறைவு செய்தால் தான் அதிபர் பரீட்சை எழு­தலாம். சித்­தி­ய­டைந்தால் தான் அதி­ப­ரா­கலாம்.

ஆனால் ஆரம்­பிக்­கப்­படும் ஒரு மத்­ர­சா­வுக்கு பரீட்­சையும் தேவை­யில்லை. அனு­ப­வமும் தேவை­யில்லை. தானே தன்னை நிய­மித்துக் கொண்டு புதிய மத்­ர­சா­வொன்றை ஆரம்­பித்து விடலாம்.

இதற்கு தேவை ஒரு தன­வந்­தரே. இதற்கு செல­வ­ளிக்க இவர் முன்­வ­ருவார். அந்த தன­வந்தர் கொடுக்கும் பணம் போதாத போது முதலில் அந்த ஊரிலும் பின் நாடெங்கு­முள்ள ஏனைய முஸ்லிம் ஊர்­க­ளிலும் கோவை­க­ளையும் டிக்­கட்­க­ளையும் காட்டி பணம் சேர்ப்பார்.

அதிலும் ஒரு விஷேடம் உண்டு. மக்­க­ளி­டமும் வெளி­யூர்­க­ளிலும் பணம் சேர்ப்­ப­தற்கு அந்த அதி­பரோ தன­வந்­தரோ செல்­வ­தில்லை. சில மத்­ர­சாக்­களில் கெள­ர­வ­மாக இருக்க வேண்­டிய உஸ்­தாத்­களை அனுப்­புவர். இன்னும் சில மத்­ர­ஸாக்­களில் படிக்கும் மாண­வர்­களை அனுப்­புவர். இவ்­வாறு செல்­ப­வர்கள் சில தினங்கள் தங்கி வரு­வ­து­முண்டு. இவர்­களின் பாது­காப்பை எவ­ருமே சிந்­திப்­ப­தில்லை. அங்கு சென்­றி­ருக்கும் நிலையில் விபத்­துகள் நடந்தால் என்ன செய்­வது. அல்­லாஹ்வின் பாதையில் பணம் சேர்க்கச் சென்­றார்கள் என்று கூறித் தப்­ப­லாமா. பயணம் சென்­றி­ருந்த மாண­வர்கள் நீரில் மூழ்­கிய சம்­ப­வங்­களும் இல்­லாமல் இல்லை. விபத்­து­களில் அகப்­ப­டா­மலும் இல்லை.

இப்­போது மத்­ர­சாக்கள் இல்­லாத ஊர்­களே இல்லை எனலாம். ஒரு ஊருக்கு ஒன்­றல்ல பல மத்­ர­சாக்கள் இருப்­பதை நாம் காண்­கிறோம். காரணம் மத்­ரசா ஆரம்­பிப்­ப­தற்கு எந்த கட்­டுப்­பாடும் கண்­கா­ணிப்பும் இல்­லா­ததே. சில பிர­தே­சங்­களில் தஃவா கொள்­கைக்கு ஏற்ப தனித்­தனி மத்­ர­சாக்கள் உண்டு. ஒரே இஸ்­லாத்தைப் பின்­பற்றும் எம்­மி­டையே ஒற்­றுமை இல்லை.

இன்னும் சில ஊர்­களில் புதிய மத்­ரசா வர கார­ணங்கள் உண்டு. இருந்த மத்­ரசா நிர்­வா­கி­க­ளோடு முரண்­பட்ட உஸ்­தாத்கள் அங்­கி­ருந்து பிரிந்து சென்று தான் ஒரு புதிய மத்­ர­சாவை அமைத்து விடுவார். அதே ஊரில் முடி­யா­விட்டால் பக்­கத்து ஊரில் அல்­லது வேறு ஊரில் அமைத்­துக்­கொள்வார். இதற்கு ஒரு புகழ் விரும்பும் தன­வந்­தரை தேடிக்­கொள்வார். கட்­டுப்­ப­டுத்த எவரும் இல்­லா­ததால் எங்கும் எத்­த­னை­யையும் அமைத்­துக்­கொள்­ளலாம். தகு­திகள் அனு­பவம் தரங்கள் விதிக்க எவரும் இல்­லா­ததால் யாரும் தட்டிக் கேட்க முடி­யாது.

இந்த மத்­ர­சாக்­க­ளுக்கு பொது­வான ஒரு பாடத்­திட்டம் இல்லை. அங்­குள்ள உஸ்­தா­து­களோ அதி­பரோ கூறு­வது தான் பாடத்­திட்டம். பரிந்­து­ரைக்­கப்­பட்ட கிதா­புகள் இல்லை. பொது­வான பரீட்சை இல்லை. இந்த உஸ்­தாத்­து­களே வினாக்­களை கொடுப்பர். விடைத்­தாள்­களை திருத்­துவர். புள்ளி வழங்­குவர். சித்­தி­ய­டையச் செய்வர்.

பொது­வான பாடத்­திட்­ட­மொன்று இல்­லாது இருப்­ப­தாலும், தற்­போ­துள்ள விடைத்தாள் திருத்தும் முறை­யி­னாலும் மத்­ர­சாக்­க­ளி­லி­ருந்து வெளி­யாகும் உல­மாக்­களின் தரமும் திறனும் சம­மாக இல்லை. இதில் கட்­டா­ய­மாக மாற்றம் வேண்டும்.

மிகவும் கவ­லைப்­பட வேண்­டிய விடயம் ஒன்று உள்­ளது. ஆறு மாதம் தொடர்ந்து ஆங்­கில வகுப்­புக்கு சென்ற ஒருவன் ஆங்­கிலம் நன்­றாக பேசு­கிறான். ஆனால் ஐந்து ஆறு வரு­டங்கள் அரபு மொழியைக் கற்ற இரண்டு மாண­வர்கள் சந்­தித்தால் அரபு மொழியில் பேசு­வதை நாம் காண்­ப­தில்லை.
இன்று ஏதா­வது பிரச்­சி­னைகள் வந்து விட்டால் மட்­டுமே இந்த மத்­ர­சாக்கள் பற்றி பேசுவர். ஹஜ் பயண ஏற்­பா­டு­களைக் கவ­னித்­துக்­கொண்டு பள்ளிச் சொத்­துகள் நிர்­வாகம் தொடர்­பான பிரச்­சி­னை­களை வக்பு சபைக்குச் சாற்றி விட்டு நிற்கும் முஸ்லிம் விவ­காரத் திணைக்­க­ளமும் அண்­மைக்­கா­லங்­களில் மத்­ரசா பற்றி பேச ஆரம்­பித்­துள்­ளது. இது நல்ல விட­யமே. ஆனால் இதனை இடையில் நிறுத்தக் கூடாது.

திணைக்­களம் மத்­ரசா பாடத்­திட்டம் பற்றி பேசு­கி­றது. பரீட்­சைகள் பற்றி பேசு­கி­றது. இவை அறிக்­கை­க­ளுடன் மட்டும் முடிந்து விடவும் கூடாது.
அர்த்­த­மற்­ற­தா­கவும் ஆகி­விடக் கூடாது. உரி­ய­வர்­களின் ஆலோ­ச­னையை பெற்று முறை­யாக நிரந்­த­ர­மாக செய்ய வேண்டும்.

அண்­மையில் மத்­ரசா மாணவன் ஒருவன் கொலை செய்­யப்­பட்­டமை, இன்­னு­மொரு மாணவன் தாக்­கப்­பட்­டமை தொடர்­பாக செய்­திகள் வந்­ததும் திணைக்­களம் மீண்டும் விழித்­துக்­கொண்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மாணவன் கொலை தொடர்­பாக திணைக்­க­ளத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்க குழு­வொன்றை நிய­மித்­துள்­ள­தாக ஊட­கங்கள் கூறு­கின்­றன. இக்­கு­ழுவின் அறிக்­கையும் சிபா­ரி­சு­களும் இச்­சம்­ப­வத்­தோடு மாத்­திரம் நின்­று­வி­டாமல் ஒட்­டு­மொத்த மத்­ர­சாக்­க­ளையும் மறு­சீ­ர­மைப்­பதை நோக்­க­மாக கொண்­ட­தாக இருக்க வேண்டும்.

மத்­ரஸா பதிவு, பாடத்­திட்­டங்கள், மத்­ர­சா­வுக்கு நிய­மனம் பெறும் அதிபர் உஸ்­தாத்மார் தகு­தி­களை நிர்­ண­யித்தல், இவர்­க­ளுக்­கான பதவி உயர்வு, பரீட்­சைகள், மாண­வர்­களை சேர்ப்­ப­தற்­கான வய­தெல்லை, அவர்கள் பெற்­றி­ருக்க வேண்­டிய பாட­சாலைக் கல்­வியின் தரம், மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பொது தவ­ணைகள், விடு­முறை தொடர்­பான சிபா­ரி­சுகள், மெள­லவிப் பட்­டத்­திற்­கான பரீட்­சையை இலங்கை பரீட்சைத் திணைக்­களம் பரீட்­சை­யாக எப்­படி மாற்­று­வது?, மெள­லவிப் பரீட்சை பெறு­பேறை க.பொ.த சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு சம­மாக்க அர­சாங்க வர்த்­த­மா­னியை வெளி­யிட எடுக்க வேண்­டிய முயற்­சிகள், மெள­லவிப் பரீட்­சைக்கு மேல் இரண்டு வரு­டங்கள் கற்ற பின் க.பொ.த. உயர் தரத்­திற்கு சம­னான பரீட்­சையை எவ்­வாறு பெறு­வது என்­பன பற்­றிய ஆலோ­ச­னையை இக்­குழு தர வேண்டும்.

அத்­தோடு மத்­ர­சாக்­க­ளுக்கு தேவை­யான புதிய சுற்­ற­றிக்­கைகள் விதிகள் திணைக்­களம் மூலம் உரு­வாக்­கப்­பட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக க வெளியிடப்பட வேண்டும், உஸ்தாத்மாருக்கான ஒழுக்க விதிகள் ஒழுக்கக் கோவைகள் அமைக்கப்பட வேண்டும். அதே போன்று மாணவர்களுக்கான ஒழுக்கக் கோவையும் அமைக்கப்பட வேண்டும்.

இவற்றை பரிபாலிக்கவும் விசாரணை செய்யவும் திணைக்களத்தில் வக்பு சபை போன்ற அதிகாரமும் அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்.

ஒழுக்க விதி­களை மீறும் உஸ்­தாத்­மாரை அந்த மத்­ர­சாக்­களில் இருந்து நீக்­கவும் அவர்­களை குறிப்­பிட்ட காலத்­துக்கு வேறு மத்­ரசாக்­க­ளுக்கு நிய­மிக்­காமல் இருக்­கவும் உத்­த­ர­விடும் சபை­யாக இந்த சபை அதி­காரம் பொருந்­தி­ய­தாக இருக்க வேண்டும். –

சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் – VV

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *