லீப் தினத்தில் பிறந்த பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர் கை சன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் பெய்க் ஆகியோர் பிப்ரவரி 29 அன்று காலை 5.12 மணிக்கு, அவர்களது மூன்றாவது குழந்தையான சோலி என்ற மகளை பெற்றெடுத்தனர்.

இது குறித்து, சன் கூறியதாவது, பேபி சோலி பிப்ரவரி 26 அன்று பிறக்கவிருந்தார் எனினும் என் பிறந்தநாளில் அவள் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் என் கணவரும் சொல்லிக்கொண்டிருந்தோம். எப்படியோ, அது நடந்தது,” என்றார்.

சன் மற்றும் அவரது மகளும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்வதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகவே உள்ளது, ஏனெனில் பிப்ரவரி 29 ஒருவருக்கு இருக்கக்கூடிய மிக அரிதான பிறந்தநாள். இருப்பினும், குறைந்தது 5 மில்லியன் மக்கள் தங்கள் பிறந்தநாளை லீப் நாளில் கொண்டாடுகிறார்கள். பெப்ரவரி 29 அன்று ஒருவர் பிறப்பதற்கான வாய்ப்புகள் 1இல் 1,461 என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *