போதை நோய்க்கு இனம், மதம், மொழி தெரியாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – விசேட அதிரடிப்படை கட்டளை பிரதானி

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமுதாய குழுக்களை தெளிவூட்டும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ்மா அதிபரால் கூறப்பட்டது போன்று யுத்திய பணிக்கு விடேட அதிரடிப்படை முக்கிய பங்கு காணப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் 17 அன்று குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பணிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு தொடர்பில் இன்று 19 பொலிஸ் பிரிவுகளில் தெளிவுபடுத்தலில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த நாட்டில் விசேட அதிரடிப்படையானது இந்த பணிக்காக ஈடுபடவில்லை. 30 வருட கால யுத்தத்தின் போது இராணுவத்துக்கு ஒத்துழைப்பத இருந்தது.

அன்று தேசிய பாதிப்புக்காக விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டனர். இன்று யுத்திய பணிக்குக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

மக்கள் என்பது பொலிஸ். பொலிஸ் என்பது மக்கள். தற்பொழுது எமது நாட்டில் போதை எனும் நோய்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போதை நோய்க்கு தமிழ், சிங்களம, முஸ்லிம், கத்தோலிக்கம் என வேறுபடுத்த தெரியாது.

பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அதனால்தான் முதலில் அடையாளப் காணப்பட்ட வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை பொலிஸ்மா அதிபரால் மேற்கொள்ளப்பட்டது.

ஆகையால், இந்த வெற்றி பயணத்தை தொடர்வதற்காகவும், போதைப்பொருளை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காகவும் பொதுமக்களாகிய தங்களின் பங்களிப்பு அவசியம் என கூறுகின்றோம். எமக்கு உதவ முன்வர வேண்டும் என அழைக்கின்றோம்.

உங்களால் தரப்படும் அத்தனை தகவல்களும் இரகசியமாக பேணப்படும். உங்களை யாரும் அடையாளம் காணாத வகையில் உறுதி செய்வோம். உங்கள் தொலைபேசி அழைப்பினை யாரும் பார்வையிட முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் உங்களை அடையாளப்படுத்த வேண்டியதில்லை.

வன்னி மக்களாகிய நீங்கள் எம்முடன் இணைந்து பலத்தை நிரூபித்துள்ளீர்கள். சிங்கம், தமிழ் என இன வேறுபாடின்றி பொலிசாருடன் இணைந்து இந்த பணியை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பணி பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மட்டும் முடியாது. ஆகையால் யுத்திய திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யுத்திய பணி மூலம் போதைப் பொருள் வியாபாரிகள நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் கேரல கஞ்சா, ஜஸ் போன்ற போதைப்பொருட்கள் வன்னி பகுதி ஊடாக தெற்கிற்கு கடத்தப்படுகிறது.

இந்த போதைப்பொருள் கடத்தல், மற்றும் வியாபாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு பொது மக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது. போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டுக்கு விசேட அதிரடிப்படையினர் என்றும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *