ஸ்டாலினை சந்திப்போம் வாருங்கள்- டக்ளஸை அழைத்த இந்தியா அமைச்சர்

 

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான விவகாரம் மிகத்தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வருகை தருமாறு பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்நிலையில், தமிழக அரசின் உத்தியோக பூர்வமான அழைப்புக்காக காத்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றமை தொடர்பில் ஆழமான கரிசனைகளைக் செலுத்தி இந்த விவகாரத்துக்கு தீர்வொன்றைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராணயன் எனக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

 

அக்கடிதத்தில் அவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் இந்தவிடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு அவசரமாக எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் தரப்பினரும் என்னுடன் முதல்வருடனான சந்திப்பு தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தமிழக முதல்வரின் உத்தியோக பூர்வமான அழைப்பு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்காக நான் காத்திருக்கின்றேன்.

 

அதேநேரம், தமிழக முதல்வருடனான சந்திப்பின்போதுரூபவ் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதையும், இழுவைமடிப்படகுகள் பயன்பாட்டை தவிர்ப்பதையும் வெளிப்படையாகவே எடுத்துக்கூறுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

 

அந்த விடயத்தினையும் நான் என்னுடன் தொடர்புகொண்டுள்ள தமிழக அரசின் தரப்புக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *