நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும், அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் போதியளவு தெளிவு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தெற்கில் போன்றே வடக்கிற்கு சென்று மக்களை தெளிவுபடுத்துமாறு தம்மிடம் கனடிய வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் கோரியதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களின் போது நாட்டில் பாரிய மற்றம் ஏற்படும் என கனடிய வாழ் இலங்கையர்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலின்போது அதிக எண்ணிக்கையிலான கனடிய வாழ் இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக நாடு திரும்புவார்கள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.