காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் ஆகவே காசாவிற்கு அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களையும் தடையற்ற விதத்தில் இஸ்ரேல் அனுமதித்து உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மந்தபோசாக்கு போன்ற காரணங்களால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.