SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!

கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்  துஷ்மந்த மித்ரபால நேற்று (05) மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக இன்று (06) பிற்பகல் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *