LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

5 ஆவது லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

420 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 154 வீரர்கள் இலங்கை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் வீரர்கள் ஏலத்திற்காக 5 இலட்சம் டொலர் வீதம் 2.5 மில்லியன் டொலர்களை பயன்படுத்தவுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ள மற்றும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் பின்வருமாறு…

கொழும்பு

சாமிக்க கருணாரத்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்கிரம, நிபுன் தனஞ்சய, க்ளேன் பிளிப்ஸ்

தம்புள்ளை

தில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, துஷான் ஹேமந்த, பிரவீன் ஜயவிக்கிரம, முசுத்தாபிசூர் ரகுமான், இப்ராஹிம் சத்ரன்

காலி

பானுக ராஜபக்ஷ, லசித் குருஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஷ் தீக்‌ஷன, டீம் சைபர்ட், எலெக்ஸ் ஹெல்ஸ்

யாழ்ப்பாணம்

குசல் மெண்டிஸ், அவிஸ்க பெர்ணான்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அமதுல்லா ஒமர்சாய், நூர் அஹமட்

கண்டி

வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, என்ரு ப்ளெச்சர், கயில் மெயர்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *