இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)

(அஷ்ரப் ஏ சமத்)

அரபு உலகின் ஓர் துனிச்சல் மிக்க சிறந்த கல்வியறிவைக் கொண்ட தலைவர் ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைஸ்…அவர்கள்…. அவர் .பலஸ்தீனர்களை பச்சை பச்சையாக இஸ்ரேல் படுகொலைகளை நேரடியாக கண்டித்து அதற்கு பதிலடியும். கொடுத்தவர் தனது நாட்டினை ஓர் ஓழுக்க இஸ்லாமிய புரட்சி நாடாக உருவாக்க முற்பட்டவர். அனு ஆயுதம், விஞ்ஞானம் தொழில்நுடப்த்துறையில் அரபு உலக வரலாற்றில் முன்னனியில் திகழும் நாடாக ஈரான் விளங்கி வருகின்றது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸ் அவர்கள் நேற்றும முன் தினம் 19 ஆம் திகதி தமது அன்டைய முஸ்லிம் நாடான அஜர்பைசான் நாட்டுக்குச் சென்று அங்கு ஓர் பின்தங்கிய பிராந்தியத்தில் குடி நீர் தேகத் திட்டமொன்றை திறந்து வைத்து நாடு திரும்பினார் அவருடன் தனது வெளிநாட்டு அமைச்சர் ,மற்றும் ஆளுனர், விமான ஓட்டி, தொழில்நுடப, வைத்தியர் மெய்ப்பாதுகாவலர் என 9 பேர் ஈரான் திரும்புகையில் அஜர்பைசான் கிழக்கு ஈரான் எல்லையில் ஹெலிக்கெப்டர் காலநிலை கார்ணமாக விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனர்.

இவ் துயர சம்பவம் 20 காலை ஈரான் ஊடக வாயிலாக அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டில் இச் சம்பவம் ஓர் துயர் சம்பவமாக உள்ளது. தற்போதைய இரண்டாவது ஆயத்துல்லாஹ் கொமெனி அவர்கள் துனை ஜனாதிபதியை பதில் ஜனாதிபதியாக் நியமித்துள்ளார்கள்….அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு மீள ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுப்பதற்கு புரட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது நாட்டுக்கு அல்லாமல் வேறு ஓரு நாட்டுக்கு குடி தண்ணீர் நன்மையான ஒர் திட்டத்தினை திறந்து வைப்பதற்கு சென்றிருந்தார். அதனால் அவரின் திடீர் மரணம் இந்த உலகில் நல்ல விடயமொன்றுக்கும், தனது சமூகத்திற்கு அன்றி மனித குலத்திற்கு நன்மையான காரியத்திற்கே தன்னை அர்ப்பணித்துள்ளார். . அதனூடே தனது உயிரையும் மாய்த்துள்ளார் அவரது இறப்பு ஓர் பீசபீல் மையத்தாகும்.

காலம் சென்ற ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸ் நவம்பர் 1960 ஆம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க பற்றுள்ள ஓர் குடும்பத்தில் பிறந்தார். 1978 ஆயத்துல்லா கொமெயினி புரட்சியில் இணைந்து தீவிரமாக ஈடுபட்டார்….தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் சட்ட வல்லுநராக தன்னை நெறிப்படுத்தினார். 1980 களில் மாவட்ட சட்டத்தரணியாக செயற்பட்டார். 1985ல் பிரதி சட்ட வல்லுநராக தெஹ்ரானில் கடமையாற்றினார். 1989- 1994 வரை பிரதி சொலிசிட்டர் ஜென்ரல் ஆக செயல்பட்டு 1994 -2004 வரை தெஹ்ரானின் பரிசோதக நாயகமாக கடமையாற்றினார்….2004 -2014 பிரதி நீதிபதி 2004 -2005 சட்ட ஆணையாளர் நாயகம், உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக வும் கடமையாற்றியுள்ளார்…1975 ல் தனது சட்டம், தொழில்நுட்பம் பற்றிய கலாநிதி கல்வியை கற்ற தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கல்வியில் சட்டம் தொழில்நுட்பம் சம்பந்தமான இணை பேராசிரியரகாவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

2016ல் அரசியல் கட்சியான இஸ்லாமிய புரட்சி படையினர் கட்சியின் தலைவராக செயல்பட்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளார்…. 2021 ஜூன் 63வீத வாக்குகளை (18 மில்லியன் ) வாக்குகளைப் பெற்று ஈரான் குடியரசின் 13வது ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைஸ் தெரிவு செய்யப்பட்டார்இவர் மிகவும் இஸ்லாமிய் மார்க்க பக்தி கொண்டவர் , இவரது மனைவியும் ஓர் ஆயத்துல் ஈரான் பள்ளியின் பேஸ் ஈமாமின் மகளைத் திருமணம் செய்துள்ளார் அவரது மனைவியும் ஓர் விஞ்ஞானியாவார், இரண்டு மகள் உள்ளனர். இவர்களும் பல்கலைக்கழக கல்வி த் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
ஈரான் நாட்டின் புதிய தொழில்நுட்பம் விஞ்ஞான ஆராய்ச்சி காகவும் பெரிதும் வளர்ச்சி மிக்க நாடாக வளப்படுத்துவதற்கு இவரது நோக்கமாகும்.

ஈரான் ஜனாதிபதி திட்டமிட்ட கொலை?: ஹெலியில் உள்ள சந்தேகம் 

அண்மையில் இலங்கை வருகை தந்து தெற்கில் உமா ஓயா நீர்த்தேக்க திட்டம் திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதே வேலை கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் வருகை தந்து உடன் தனது ஐந்து நேரத் தொழுகையின் மஃரிப் தொழுகை அவர் இமாமாக நின்று தொழுகை நடத்தினார் அவருடன் வருகை தந்திருந்த மெய்பாதுகாவலர்கள், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் துாதுவர் அனைவரும் அவர் பின்னால் நின்று தொழுதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஈரான் ஜனாதிபதி அங்கு உரையாற்றும் போது உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் ஒர் நாடாக ஈரானை வளர்ந்து வருவதாக தெரிவித்தார் இலங்கையின் உமா ஓயா திட்டம் போன்ற மேலும் 21 நாடுகளில் ஈரான் பொறியியலாளர்கள் தொழில்நுட்ப அதிகாரிகள் குடிநீர்த் திட்டம், நீரை மின்சாரம் ஆக்குதல், நீர்த்தேக்கங்களை விவசாய உற்பத்திக்கு திசைதிருப்புதல் போன்ற திட்டங்களை ஈரான் அமுல்படுத்துவதாக தெரிவித்தார்.
அத்துடன் அவர் தனது தலைவர் அயத்துல்லா கொமேனி ஆதங்கமாக இருந்த பலஸ்தீன் புனித பூமியை இஸ்ரேவலர்கள் அமேரிக்கர்கள் இடமிருந்து மீட்டெடுத்து பலஸ்தீன் ஓர் சுதந்திர நாடாக திகழ வேண்டும் என உரையாற்றினார்

அவர் மிகவும் கவலையாகவும் கண் கலங்கிய நிலையிலும் பலஸ்தீன் மக்கள் வயது முதிர்ந்தோர் குழந்தைகள் வைத்தியசாலைகள் ஊழியர்கள் கொலை செய்வதையிட்டு அவர் இஸ்ரேல் இந்த காட்டுமிரான்டி கொலைகளை நிறுத்துதல் வேண்டும். என்றார். அத்துடன் ஈரான் ஈராக் யுத்தத்தில் பல உயிர்கள் அழிந்தாகவும் இதற்கு அமெரிக்கா அரபு நாடுகளை தமக்கு சார்பாக உடன் படுத்துவதாகவும் அவர்களே பயங்கரவாதத்தை உருவாக்கி ஜ.எஸ்.எஸ் என்ற போலி பயங்கரவாதிகளை உருவாக்குவதாகவும் அவர் அங்கு உரையாற்றினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைந்து எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் அன்னாருக்கும் ஏனைய 8 பேர்களுக்கு மஹ்சரில் சுவனபதியை வழங்க எல்லாம் வல்ல அல்லஹ்வைப் பிராத்திக்கின்றேன். ஆமீன்

 

இலங்கைக்கு சென்ற மாதம் அவர் வருகை தந்த போது, காட்சிப்படுத்தப்பட்ட நேரடி வீடியோக்களை பார்வையிட: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *