சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு முன்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தழுவி ஒரு நாவலை அவர் எழுதவுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக அறிவிப்பை சரத் பொன்சேகா ஜூன் மாதத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி சேராது தனித்து போட்டியிடுவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக தனது பிரச்சாரத்தின் போது புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் அவர் பயணிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவது தொடர்பிலேயே அவரது தேர்தல் பிரச்சாரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவர் தனது பிரச்சாரத்திற்கு முன்பாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தழுவி ஒரு நாவலை எழுத்தவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

குறித்த நாவல், அவர் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் போரில் அவரின் வகிபாகம் குறித்து அமையவுள்ளது. அதேவேளை, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *