காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதோடு அதற்குப் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க, மே 31 ஆம் திகதி வரை இதற்கான பங்களிப்பை வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அனைத்து நன்கொடைகளும் உடனடியாக ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *