தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள தமது நெருங்கிய நண்பர்களுடன் அவர் ரகசிய கலந்துரையாடல்களையும் நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
ராஜித சேனாரட்ன, ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல ஆதரவளிப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமை என தெரிவித்துள்ளார். அவர் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டு சுகாதார அமைச்சுப் பொறுப்பை ஏற்பார் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகாவையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ரணில் முயற்சிகள் ஓரளவு வெற்றிக்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 – 20 எம்.பிகள் வரை தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளதாகவும் தெரியவருகிறது. தேசிய அரசாங்கத்தின் பிரதமராக சம்பிக்க ரணவக்கவை நியமிக்கும் சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.
oruwan