சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்திய மகேன் ரட்டட்ட (என்னால் நாட்டுக்கு) அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அமைப்பின் தலைவர், சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தியதின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த அமைப்பின் தலைவர் சஞ்சய மஹாவத்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலி சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சஞ்சய முறைப்பாடு செய்திருந்தார்.மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேனவின் நிறுவனம் தொடர்பிலும் சஞ்ச முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சஞ்சவை கைது செய்துள்ளனர்.