தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ 

(UTV | கொழும்பு) –    நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோ காற்பந்துத் தொடரே (Euro League) தனது கடைசி யூரோ தொடர் என போர்த்துக்கல் (Portugal) காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ கடந்த இருபது வருடங்களாக யூரோ காற்பந்துத் தொடர்களில் விளையாடி வருகின்றார். ஸ்லோவேனியா (Slovenia) அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் மிகுதி நேரத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ, மைதானத்திலேயே கண்கலங்கினார்.
எவ்வாறாயினும், இரு அணிகளும் கோல் எதனையும் போடாததால் பெனால்ட்டி முறையில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.

அதனையடுத்து, போர்த்துக்கலை சேர்ந்த ஒளிபரப்பாளர் ஒருவருக்கு கருத்து தெரிவிக்கையில் இதுவே தனது கடைசி யூரோ கிண்ணத் தொடர் என ரொனால்டோ கூறினார். 2004 முதல் 2024 வரை யூரோ தொடர்களில் விளையாடியுள்ள ரொனால்டோ, இதுவரை குறித்த தொடர்களில் 14 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *