பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பேருந்து நிலைய வளாகத்தில் தற்போது நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.