வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் அழுத்தங்களை முகம்கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் வழங்கப்படாவிடின் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன்.
இது குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சகல பட்டதாரிக்கும் தொழில் வழங்குதல் மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத் தருவேன். அடிப்படையான இலகு சலுகை மூலதன பிரவேச வாய்ப்பை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன்.
அரச வேலைகள் மற்றும் தனியார் துறை வேலைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொது நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன்.
மேலும், தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக தொழில்வாய்ப்புகளை புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பட்டதாரிகள் அடிப்படை வருமானம் பெறும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இது அரசியல் சூதாட்டமாக முன்னெடுக்கப்படாது. தற்போதைய அரசாங்கம் போல் அரசியல் சூதாட்டங்களை நாம் முன்னெடுக்க மாட்டோம்.
அரசாங்கம் தனது இருப்பை பாதுகாக்க பல்வேறு ஏமாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு தேர்தல் பிரச்சாரம் மட்டுமே, அரசியல் நோக்கங்களை மனதில் கொண்டு ஏமாற்று நடவடிக்கையாகவே இதனை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தந்திரங்களுக்கு ஆளாக வேண்டாம். சிக்கிக் கொள்ள வேண்டாம். பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு முன்னர் தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சகல பட்டதாரிகளின் அடிப்படை வருமானம் உறுதி செய்யப்படும். இதற்கான வேலைத்திட்டத்தை நாம் வகுத்துள்ளோம். அரசாங்கத்தை போன்று தாம் ஏமாற்று நடவடிக்கைகளை செய்யப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.