ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்டத் தலைவர் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் ரம்புக்கணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 18 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர் என தெரிவித்தனர்.