கடந்த 31/07/ 2024 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மண்/பண்டாரவெளி முஸ்லிம் மகாவித்தியாலய பாடசாலைக்குள் புகுந்து காதர் மஸ்தான் ராஜாங்க அமைச்சரின் முசலி இணைப்பாளர் முகமது தன்சீம் கடமையிலிருந்த பாடசாலை அதிபரை, ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் சட்டையை பிடித்து இழுத்து வந்து கன்னத்தில் அறைந்துள்ளார்.
இவ் அடாவடித்தனத்தை சிலாபத்துறை பொலிஸ் நிலையம் மற்றும் வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை. அரசியல் சித்து விளையாட்டு காப்பாற்றுகின்றது.
இச் செயல்பாட்டால் முசலி பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இவன் வலைய கல்விப் பணிப்பாளர் உதவியுடன் ஆசிரியர் அதிபர் இடமாற்றம் போன்ற பழிவாங்கல்களை தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.