பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் இன்று சனிக்கிழமை (03) 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என்று ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஆஃப் ஃபயர்’ எனும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.