புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்ட போது கற்பிட்டி பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்துச் சம்பவம் புதன்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டியின் சாரதியும் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த, விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நுரைச்சோலைப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.