ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால், ஒவ்வொரு நபருக்கும் 200 மில்லியன் ரூபா செலவு செய்ய நேரிடும் என தான் நம்புவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம்,
“ஒரு வேட்பாளர் அதிகரித்தால், எமது செலவு குறைந்தபட்சம் 200 மில்லியன் அதிகரிக்கும் என நான் கூறுவேன். அது இந்த நாட்டு மக்களின் பணம்.
கருத்தியல் ரீதியாக பலர் வருகிறார்கள். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. அநேகமானோர் ஊடக வௌிச்சத்தை பெறுவதற்காக வருகின்றனர்.