அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக புத்தளம் மக்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு புத்தளம் தில்லையாடியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது.
இதன்போது, பொதுமக்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
கட்சியின் உயர்பிட உறுப்பினர் மதின் சேர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.